இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றால் உ.யிரிழப்போரின் ச.டலங்களை கட்டாய த.கனத்துக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அந்த நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டியில்ருந்து இன்றுவரை கொரோனா நோயால் உயிரிழப்போரின் சடலங்களை அரசாங்கம் கட்டாய தகனம் செய்துவருகிறது.
கொரோனாவால் உயிரிழப்போர் உடலங்களை எரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டபோதும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கட்டாயத் த.கனம் செய்துவருகிறது.
இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களின் உடலங்களும் இவ்வாறு எரிக்கப்பட்டுவருவதனால் தமக்கு பெரும் அ நீதி இளைக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் மக்களின் அமைப்புக்கள் கூறிவருகின்றன.
இதுதொடர்பாகவே மேற்படி ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.