இப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க… கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடித்த அதிர்ஸடம்…!

கணவர் கனவில் வந்த இலக்கத்தால் மனைவிக்கு கோடிக்கணக்கில் அதிர்ஸடம் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா டொரோண்டோவில்  Deng Pravatoudom (57) என்ற பெண் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 20 வருடங்களுக்கு முன்பு இவரது கணவரின் கனவில் அடிக்கடி ஒரு நம்பர் வந்துள்ளது.

அதை அவ்வப்போது தனது மனைவியிடம் அவர் கூறி வந்துள்ளார். இதனால் கணவர் கனவில் வந்த நம்பரில் பல ஆண்டுகளாக அந்த பெண் லொட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.

தற்போது Ontario Lottery and Gaming என்ற லொட்டரியில் 60 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 1180 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில்  Deng Pravatoudom திக்குமுக்காடி போயுள்ளார்.

தனது தாயும், தந்தையும் 40 ஆண்டுகளாக குடும்பத்திற்காக கடினமாக உழைத்து பல தியாகங்களை செய்துள்ளனர், அவர்கள் இந்த மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள் என்று Deng Pravatoudom-ன் மகன் பெருமையாக தெரிவித்துள்ளார்.

பரிசை வென்ற  Deng Pravatoudom இதுகுறித்து கூறுகையில், ‘என் கணவர் கனவில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வந்த இலக்கத்தில் இந்த லாட்டரி சீட்டை வாங்கினேன். அதில் எனக்கு 60 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா செட்டிக்குளத்தில் வாள்வெட்டுக் கும்பல் வீடு புகுந்து அட்டகாசம் : பொருட்கள் சேதம்!