இலங்கையில் 65 இலட்சம் முகப்புத்தகபாவனையாளர்கள் உள்ளதாக இன்றையதினம் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இவர்களில் 25 வயது தொடக்கம் 34 வயதுடைய 21 இலட்சம் பேர் இருக்கின்றார்கள் எனவும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.
எனினும் இலங்கையில் சுமார் 22 மில்லியன் பேர் சனத்தொகை கணக்கீட்டில் பதிவாகியிருக்கின்றனர்.
மொத்த சனத்தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் முகப்புத்தகபாவனையாளர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.