வவுனியாவில் தொடரும் சங்கிலி அபகரிப்பு : பெண்ணின் நான்கு பவுண் சங்கிலி அபகரிப்பு!

வவுனியாவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25.01.2021) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது வீடு நோக்கிச் சென்றுள்ளார்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த நான்கு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச்சென்ற வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்… காரணம் என்ன?