வவுனியாவில் இன்றையதினத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இதற்கமைய, வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 301 ஆகஅதிகரித்துள்ளது.