வவுனியாவில் பல்வேறு கு.ற்ற செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது : காவல்துறையின் அ.திரடி நடவடிக்கை!

வவுனியா காவல்துறையினர் மேற்கொண்ட 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது பல்வேறு கு.ற்றச்செயல்களுடன் தொடர்புடைய 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

“குற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (23.01.2021) இரவு 7.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது நீதிமன்ற பி.டியானை உத்தரவில் நால்வரும், க.ரோயினுடன் இருவரும், ம.துபோ.தையில் வாகனம் செலுத்திய மற்றும் மக்களுக்கு .இ.டையூறு ஏற்படுத்திய கு.ற்றச்சாட்டில் பதினொரு நபர்களும் , சந்தேகத்தின் அடிப்படையில் வீதியில் நடமாடிய ஐவரும் பேர் என மொத்தமாக 22 நபர்கள் இவ்வாறு கை.து செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா காவல் நிலைய த.டுப்பு கா.வலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் அவர்களிடம் வி.சாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

வி.சாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில் ஆ.யர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் இந்த அ.திரடி நடவடிக்கைக்கு வவுனியா மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கட்டாருக்கான புதிய இலங்கை தூதுவராக எம்.மொஹமட் நியமனம்