கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றிலும்,பாடசாலையொன்றிலும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி போன்றவற்றினை திருடிய இருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 25 வயதுடைய இருவரையே கைது செய்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பேராறு பகுதியிலுள்ள வீடொன்றில் தொலைக்காட்சி பெட்டியொன்றினையும் ,கந்தளாய் அஸ்ஸபா வித்தியாலயத்தின் கதவு பூட்டினை உடைத்து பாடசாலையில் பயன்படுத்தி வந்த கணினி இரண்டினையும் திருடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கெதிராக ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகளும், காவல் நிலையத்தில் முறைப்பாடுகளும் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.