‘பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!’.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய காவல்துறையினர்!

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட சென்ற இளைஞர் ஒருவர் வழிதவறிப் போய் விட்டதை அடுத்து அவர் தேடப்பட்டு வந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் Nicolas Stacy-Alcantara, கடந்த சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில், தான் வழி தவறிவிட்டதை புரிந்துகொண்டார். எனினும் அவர் காணாமல் போய் விட்டதாக எண்ணி அவருடைய குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக தாமதிக்காமல் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மீட்புக் குழுவினர் அந்த இளைஞரை தேடிப் புறப்பட்டனர். கூகுள் மேப் மூலம் அவருடைய இடத்தை கண்டுபிடிக்க முயன்று ஒரு இடத்துக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் அந்த இளைஞரின் பனிச்சறுக்கு வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்தனர்.

பின்னர் அருகே சென்றதும் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆம், தான் எப்படியோ வழி தவறிவிட்டதை உணர்ந்து கொண்ட அந்த இளைஞர் தனது பனிச்சறுக்கு வாகனத்தை யாரேனும் தேடி வரும் பொழுது அவர்கள் கண்ணில் படவேண்டும் என்பதற்காக நிறுத்தி வைத்திருக்கிறார்.

மேலும் அவர் தனக்கென ஒரு தனி குழி ஒன்றை தோண்டியிருக்கிறார். அந்த பனி குகைக்குள் அவர் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் தான் எடுத்துச் சென்ற உணவையும் தண்ணீரையும் நேரத்துக்கு சிறிது சிறிதாக பிரித்து அருந்தியுள்ளார்.

இளைஞரது இந்த சமயோஜித புத்தி காவல்துறையினரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனையையும் செய்துவிட்டு ஆறுதலாக குகைக்குள் அமர்ந்திருந்த அந்த இளைஞரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

அத்துடன் தான் கற்றிருந்த பாதுகாப்பு வழிமுறைகளை சரியான தருணத்தில் பயன்படுத்திய அந்த இளைஞரை மீட்புக்குழுவினர் வெகுவாக பாராட்டினர். மேலும் தங்களுடைய வேலையை அந்த இளைஞன் எளிதாக்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த என்கிற வேறொரு இளைஞனும் இதே மாதத்தில் இப்படி உத்தா எனும் இடத்தில் இருக்கிற பனிச்சறுக்கு பகுதியில் குகையில் அமைந்து கொண்டு 30 மணி நேரம் பாதுகாப்பாக இருந்து பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி ஏதும் குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்று!