‘காதலனின் தொலைபேசியை பார்த்து அதிர்ச்சியான காதலி’… ‘கிழிந்த காதலனின் முகமூடி’… ஆனா, இப்படி ஒரு பழிவாங்கல், கடல்லேயே இல்லையாம்!

காதலன் தனக்கு ஏதோ துரோகம் செய்வதாக சந்தேகப்பட்ட பெண், காதலனின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சியை கிளப்பியது.

பிரிட்டனைச் சேர்ந்த லவுரன் லில்லி என்ற பெண், நாதன் ஸ்மித் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலன் ஸ்மித்தின் மீது சந்தேகம் வரவே, அவரது தொலைபேசியை ஸ்மித் தூங்கியதற்கு பிறகு சோதனை செய்து பார்த்துள்ளார்.

அப்போது, தனது காதலன் ஸ்மித் வேறொரு பெண்ணுடனும் நெருக்கமாக பழகி வருவது லில்லிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன லில்லி, தான் ஏமாற்றப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்குள்ளானார். இதன் மூலம் ஏற்பட்ட கோபத்தில் ஸ்மித்தை தனது வீட்டிலிருந்து வெளியே துரத்தி, அவரது பொருட்களையும் வெளியே தூக்கி வீசியுள்ளார் லில்லி.

பல நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டிருந்த போதும், லில்லியின் மனம் ஆறுதல் அடையவில்லை. இதனைத் தொடர்ந்து, முன்னாள் காதலன் ஸ்மித்தை பழிவாங்க சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அப்போது தான், ஸ்மித்தின் அமேசான் கணக்கு தன்னிடம் இருப்பது ஞாபகம் வந்தது.

அமேசான் கணக்கின் மூலம், ‘Cheater’, ‘Deceitful’, ‘The Unworthy’, ‘Liar’ என்ற பெயர் கொண்ட ஹிந்தி பட சினிமாக்கள் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட படங்களை ஸ்மித்தின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி வாங்கியுள்ளார். £500 (இலங்கை மதிப்பில் சுமார் 130,000 ஆயிரம் ரூபாய்) வரை இதற்கு செலவாகியுள்ளது. இதுகுறித்து ஸ்மித்துக்கு எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், வங்கி கணக்கில் பணம் குறைந்த போது, அது பற்றி விசாரித்ததில் தான் ஸ்மித்துக்கு உண்மை நிலவரம் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, தொலைபேசியில் ஸ்மித்திடம் பேசிய லில்லி, இனிமேல் நல்ல பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதே என கத்தி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். முன்னதாக, இரண்டு வருடம் ஸ்மித் மற்றும் லில்லி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், லில்லியின் தோழிகள் ‘ஸ்மித்தை காதலிக்க வேண்டாம், அவன் நீ நினைப்பது போல இல்லை’ என்றெல்லாம் கூறி எச்சரித்துள்ளனர்.

ஆனாலும், தோழிகளின் வாக்கை கேட்காமல் ஸ்மித்தை உயிருக்கு உயிராக மனமுருகி காதலித்து வந்துள்ளார் லில்லி. அதன் பின், ஒரு நாள் லில்லிக்கே சந்தேகம் வர ஸ்மித்தின் போனை எடுத்து சோதித்த போது தான் காதலனின் உண்மை முகம் தெரிய வந்தது. தன்னை ஏமாற்றிய காதலனை சற்று வித்தியசமாகவே பழி வாங்கி மன ஆறுதல் அடைந்துள்ளார் லில்லி.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு!