கணவன் உயிரிழந்த ஏழு தினங்களில் மனைவி உயிரிழப்பு! : மட்டக்களப்பில் ஏற்பட்ட சோகம்

முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று (22.01.2021) உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டமுனை மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்தநிலையில் உயிரிழந்த முதியவரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அரசடி கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி கிளிநொச்சியை வந்தடைந்தது!