திரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.! எப்போது தெரியுமா?

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார்.

இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் மாஸ்டர் திரைப்படம் கடந்த வார-இறுதி பொக்ஸ் ஒஃபீஸீல் உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. அமேசான் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் 12-ஆம் தேதி (மாசி 12) வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து தொலைக்காட்சி ஒளிபரப்பாக, சித்திரை 14-ஆம் தேதி, சன் டிவியில் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ் புத்தாண்டு அன்று மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை