காணொளி: இது ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. புதுமாப்பிள்ளைக்கு ‘மாமியார்’ கொடுத்த இன்ப அதிர்ச்சி.. ‘செம’ வைரல் காணொளி!…

திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த மருமகனுக்கு பிரமாண்ட விருந்து கொடுத்து மாமியார் அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் புதிதாக திருமணம் ஆன மருமகனுக்கு விருந்து வைப்பதில் பலர் பிரமாண்டத்தை காட்டி அசர வைப்பது வழக்கம். அந்தவகையில் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் ஒரு மாமியார் தனது மருமகனுக்கு 125 வகை உணவுகளை சமைத்து கொடுத்து அசத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில், சாப்பாட்டு மேசையில் புதுமாப்பிள்ளை அமர்ந்து இருக்க அதில் 125 வகையான உணவுகளை சமைத்து மாமியார் அடுக்கி வைத்துள்ளார். 125 வகையான உணவுகளை பார்த்த புதுமாப்பிள்ளை மிகவும் வியந்து போயுள்ளார்.

பின்னர் தனது மனைவியுடன் அமர்ந்தபடியே ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து சாப்பிடுகிறார். அப்போது புதுமாப்பிள்ளை தனது மனைவிக்கு உணவை ஊட்டிவிட முயற்சிக்கிறார். அதற்கு அந்த புதுப்பெண் வெட்கத்துடன் வேண்டாம் என்கிறார்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்று!