”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு!

மாஸ்டர் படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஜய் சந்தோஷமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார்.

இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் கடந்த வார இறுதி பொக்ஸ் ஓஃபீஸீல் (Box Office) உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்ட மகேஷ் கொனேரு, மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

அப்போது ‘விஜய், மாஸ்டர் படத்திற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக’ அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை விநியோகிக்கும் வாய்ப்பு வழங்கிய லலித்குமார் மற்றும் ஜகதீஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் விநியோகஸ்தர் மகேஷ் கொனேரு.

 

 

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் புதிய மாற்றம்! : உழவர் சந்தை திறந்து வைப்பு!