“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…!

நாயகி, ரோஜா, மின்னலே, திருமகள், வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள நடிகை நக்ஷத்ரா. பல தொலைக்காட்சிகளில் ஜோடி நம்பர் 1, சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கியுள்ளார்.

அதேபோல் தமிழில் மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் போன்ற பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தனது வாழ்க்கை துணை பற்றிய அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை இன்ஸ்டாகிராமில் அவர் கூறும்போது “நான் இன்ஸ்டாகிராமிற்கு முதல் முறையாக வந்தபொழுது, நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நடிப்பு தொழில் நான் ஈடுபட்ட பொழுது ரசிகர்கள் நீங்கள் எல்லாரும் என் சிறிய உலகத்தின் ஒரு அங்கமானீர்கள்.

நாளுக்கு நாள் நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அதுதான் என்னுடைய மிகப்பெரிய பலம். அதற்கு நான் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இந்நிலையில் உங்களிடம் ஒரு முக்கியமான நபரை இன்று மாலை அறிமுகம் செய்ய செய்ய இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “இவர்தான் ❤️ #NakshufoundherRagha” என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
எதிர்வரும் காலங்களில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் எப்படி இருக்கும்