பொது சுகாதார பரிசோதகரை (PHI) அவமதித்ததுக்கு வழங்கப்பட்ட கடூழிய தண்டனை!

அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்கழி மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று!