இலங்கை கிரிக்கெட் வீரர்களான பினுர பெர்ணான்டோ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் அணிகளிற்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்ககாக பயிற்சியில் ஈடுபட்ட போதே இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த தொடருக்குரிய வீரர்கள் 3 பிரிவுகளாக பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த வீரர்கள் ஒரு பிரிவில் பயிற்சியில் ஈடுபட்டதால், ஏனைய 2 பிரிவுகளில் உள்ள எந்த வீரர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லையென இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் தொடர்பிலிருந்த சக வீரர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.