தாமரை கோபுரம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனுடன் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம், புரட்டாதி 16, 2019 அன்று திறக்கப்பட்டது என்றாலும், இப்போது வரை அது எந்த வருமானத்தையும் ஈட்டவில்லை.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கையில்,

“தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க பெறப்பட்ட கடனுக்கான வட்டியாக ஆண்டுக்கு 560 மில்லியன் செலுத்த வேண்டும்.

இது தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாகவும், உலகின் மிக உயரமான கோபுரங்களின் பட்டியலில் பத்தொன்பதாவது இடமாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாரும் கோபுரத்திற்கு அடிக்கடி வருவதில்லை.

இந்த கோபுரம் சுழலும் உணவகத்தைக் கொண்டுள்ளது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கொரோனா பரவல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இருப்பினும், கோபுரத்தை ஒரு தகவல் தொடர்பு மையமாக மாற்றும் திட்டங்கள் உள்ளன. கோபுரத்தின் தளங்களை வாடகைக்கு எடுக்கும் திட்டங்களும் பயனற்றவை என்பதை நிரூபித்துள்ளன.” என்று கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்து வெளியிடுகையில்,

“2016 இல் திறக்கப்படவிருந்த கோபுரம் திறக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்பு சுற்றுலா மண்டலத்தை உருவாக்க அப்போதைய ராஜபக்ஷ நிர்வாகம் திட்டமிட்டிருந்தாலும், 2015 க்குப் பிறகு அனைத்து திட்டங்களும் ஸ்தம்பிதமடைந்தது.

எவ்வாறாயினும், தாமரை கோபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும்” கூறியுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வௌவாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி காணொளி..!