மலிங்கவின் முக்கிய அறிவிப்பு!…: மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தகவல்!

இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, ஐபிஎல் உட்பட அணி உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து மலிங்கா விடுவிக்கப்பட்டதாக நேற்று அறிவிப்பு வெளியானதையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானான மலிங்கா ஐபிஎல் தொடரிலும் தனது பந்துவீச்சின் மூலம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

அவரின் ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், 12 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் வெற்றிகளுக்கு முக்கியப் பங்கு வகித்தவர் மலிங்கா.

அணி உரிமையாளர்கள் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளதை மதிக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சு துறைக்குப் பயிற்சியாளராக வரவேண்டும் என தெரிவித்துள்ளது.

ஓய்வு முடிவுக்கு பின்னர் பேசிய மலிங்கா, இது கொரோனா காலம் என்பதால் கிரிக்கெட் உலகில் கடுமையாக மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில் பயணிப்பது சுலபம் அல்ல. இதுதொடர்பாக குடும்பத்துடன் பேசினேன். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடமும் இதுதொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன்.

தீர ஆராய்ந்துதான் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் என்னை 100 சதவீதம் மதிப்புடன் நடத்தியது.

அம்பானி குடும்பத்திற்கு, அனைத்து உரிமையாளர்களுக்கும், 12 வருடங்களாக என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 சீசன்களில் விளையாடியுள்ளார். இதுவரை 122 ஐபில் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுக்களை கைப்பற்றி, அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ஆத்தி… எப்டி எல்லாம் யோசிச்சு காதலை வெளிப்படுத்துறாங்க !… காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன’காதலி’! வைரல் காணொளி!