தூக்கத்தில் இருந்த கணவனை எழுப்பிய மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்!

துருக்கியில் தூக்கத்தில் இருந்த கணவனை எழுப்பி சாப்பிட அழைத்த மனையின் மீது கொதிக்கும் நீரை ஊற்றி பழிவாங்கியுள்ள கணவன்.

துருக்கியின் Konya பகுதியில் இந்த மாத துவக்கத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல் முழுவது வெந்துபோன நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட 23 வயது Rukiye Ay, நடந்த கொடூரத்தை மருத்துவமனையில் வைத்து கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

சம்பவத்தன்று தமது கணவருக்கு மிகவும் பிடித்த காலை உணவுகளை தயார் செய்து, தூக்கத்தில் இருந்த அவரை எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

அது அவருக்கு கண்டிப்பாக ஆச்சரியமளிக்கும் என நம்பியதாக கூறும் Rukiye Ay, ஆனால், கோபமடைந்த தமது கணவர் Ali Ay(28) எதற்கு தேவையில்லாமல் எழுப்பியதாக கடிந்துள்ளார்.

மட்டுமின்றி, தன்னைப்பற்றி கவலை கொள்ள தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தமது மகளுடன் காலை உணவை எடுத்துக் கொண்டதாக Rukiye Ay தெரிவித்துள்ளார்.

ஆனால், கொஞ்ச நேரத்தில் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த தமது கணவன், தம்மை விவாகரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கொதிக்கும் நீரை தம்மீது கொட்டியதாகவும் Rukiye Ay தெரிவித்துள்ளார். மட்டுமின்றி முகத்தின் மீது வீச இருந்ததை தாம் அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதலில் இருந்து தப்ப முயன்ற போது தாம் சுயநினைவற்று சரிந்ததாக கூறிய Rukiye Ay,

கண்விழித்தபோது தமது கணவன் கூந்தலைப் பற்றி இழுத்துச் செல்வதை உணர்ந்ததாகவும், ஆனால் அந்த நேரம் கணவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவே, தாம் அங்கிருந்து தப்பியதாகவும் Rukiye Ay தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் வந்து தமது கணவரை கைது செய்ததாக Rukiye Ay குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் உடனடியாக Ali Ay பிணையில் வெளிவர, பொதுமக்கள் மத்தியில் அது கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ali Ay எப்போது வெளியே வந்தாலும், அது தமக்கும் தமது மகளுக்கும் ஆபத்தாக முடியும் என்பது உறுதி என்கிறார் Rukiye Ay.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே; அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!