இலங்கையில் பெண்கள் பாவிக்கும் அழகு பொருட்கள் தொடர்பில் பல எச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழக்கப்பட்டு வருகின்றன. அதனை பொருட்படுத்தாமல் பாவனை செய்த பெண்கள் பலர் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் மூன்று அழகு கலவை அடங்கிய பொருட்களுக்கு தடை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, குளுதாதயோன் மூலக்கூறு கொண்ட கலவைத் தயாரிப்புகளை வெளியிட தடை விதிக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அஸ்திரேலியாவைச் சேர்ந்த (Facia-Premium) பேசியா-பிரீமியம் , இந்தியாவிலிருந்து (Lea-Fairness) லியா-ஃபேர்னெஸ், (Formahealth) ஃபார்மாஹெல்த் போன்றவைக்கு தடை விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று வகைகளும் தற்போது 2002 இல் நிறுவப்பட்ட மருந்து நிறுவனமான அலரிஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அந்த மூலக்கூறுகளைக் கொண்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை சுங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.