‘வெற்றிப் படிகட்டு!’.. ’30 நிமிஷத்துல 33 தளங்கள்!’… துவிச்சக்கரவண்டியில் காலை ஊன்றாமல் ஏறி.. சாகசம் பண்ணிய ‘அநாயச மனிதர்!’ .. வைரல் காணொளி!

துவிச்சக்கரவண்டி ஓட்டுவது அவ்வளவு கஷ்டம் இல்லை. என்றாலும் எதிர்க்காற்றில் துவிச்சக்கரவண்டி செலுத்தவே சில நேரங்களில் கடினமனாக இருக்கும்.

மலைமேடுகளிலும், ஏற்றமான பகுதிகளிலும் துவிச்சக்கரவண்டி ஓட்டுவதற்கு தனி பயிற்சியே தேவை. அந்த பாதைகளிலும் செல்வதற்கு ஒரு நெளிவு சுளிவு தேவைப்படுகிறது. ஆனால் 33 தளங்கள் ஒருவர் துவிச்சக்கரவண்டிலேயே ஏறிச் சென்று மாடிக்குச் சென்றுள்ளார் என்றால் நம்மால் நம்ப முடியுமா?

அதுவும் அநாயசமாக 30 நிமிடங்கள் என்கிற குறுகிய நேரத்தில் ஒருவர் துவிச்சக்கரவண்டிலேயே 33 தளங்களை கடந்திருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தான் இப்படி இளைஞர் ஒருவர் 33 மாடி கட்டிடத்தை மலையேற்ற துவிச்சக்கரவண்டி மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 33 தளங்களும், 768 படிக்கட்டுகளும் கொண்ட இந்த கட்டிடத்தின் தரைத்தள படிக்கட்டில் இருந்து மேல்தளத்தின் படிக்கட்டு வரை Aurelien Fontenoy என்பவர் துவிச்சக்கரவண்டி மூலமாகவே ஏறி உள்ளார்.

இத்தனைக்கும் அவர் எந்த இடத்திலும் இடத்தில் காலை கீழே வைக்காமல் துவிச்சக்கரவண்டியை இயக்கியிருக்கிறார்.

பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் முயற்சியில் அவர் இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ரூ.4,700 கோடி பிட்கொயினில் சேமிப்பு; ஆனால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத சோகம்… ஏன் தெரியுமா?