என் தோளில் சாய்ந்து அழுதார் அவர்… இந்திய வம்சாவளியினரான மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்: சிக்கியது எப்படி?

மனைவியை கொலை செய்துவிட்டு அவரது குடும்பத்தின் முன் நாடகமாடிய கணவனுடைய ஏமாற்று வேலை வெளியான நிலையில், அது குறித்து பேசியுள்ளார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி.

Middlesbroughவில் வாழ்ந்து வந்த பார்மசிஸ்டான ஜெசிகா பட்டேல் (34), ஒரு நாள் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்தார் ஜெசிகாவின் கணவர் மித்தேஷ்.

ஆனால், மித்தேஷின் ஐபோனிலுள்ள ஆப் ஒன்று அவர் பொய் சொல்லுவதை வெளிப்படுத்தியது. அவர் ஜெசிகாவை கொன்று விட்டு, வீட்டில் கொள்ளை நடந்தது போல் காட்டுவதற்காக அங்கும் இங்கும் ஓடியதையும், அவரது மனைவியோ அசையாமல் ஓரிடத்திலேயே இருந்ததையும் அந்த ஆப் காட்டியது.

அத்துடன், மனைவியை கொல்வது எப்படி என அவர் இணையத்தில் தேடியதும், யாரோ ஒரு ஆணிடம் தான் அவரை காதலிப்பதாகவும், தன் மனைவியின் கருமுட்டையில் உருவாகும் குழந்தையை உன் குழந்தையாக ஏற்றுக்கொள்வாயா என கெஞ்சி அனுப்பிய குறுஞ்செய்திகளும் காவல்துறையிடம் சிக்கின.

ஓரினச்சேர்க்கையாளரான மித்தேஷ், தான் சாதாரணமானவன் என உலகுக்கு காட்டுவதற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, மனைவியை ஓரங்கட்டிவிட்டு, ஆண் காதலர்களுடன் உறவு வைத்துக்கொண்டு, ஒன்பது ஆண்டு திருமண வாழ்வில் ஐந்து ஆண்டுகளை மனைவியை கொல்வது குறித்து திட்டமிடுவதிலேயே செலவிட்டுள்ளார்.

ஜெசிகாவை கொன்றுவிட்டு, அவரது இன்சூரன்ஸ் பணத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது ஓரினச் சேர்க்கை காதலனுடன் வாழ்க்கையை தொடங்குவதுதான் மித்தேஷின் திட்டம்.

கருவுறாததால், செயற்கை முறையில் குழந்தை பெறுவதற்காக முயன்றுகொண்டிருந்த ஜெசிகாவின் கருமுட்டைகளை திருடிக்கொண்டு, அவுஸ்திரேலியா சென்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும், அந்த குழந்தைகளுடன், தனது ஓரினச்சேர்க்கை காதலனுடன் வாழவும் திட்டமிட்டுள்ளார் மித்தேஷ்.

இந்நிலையில், இந்த கொலை குறித்த ஆவணப்படம் ஒன்று இன்று வெளியாகிறது. அதற்காக பேசிய ஜெசிகாவின் சகோதரி Minal, தன் தங்கை கொல்லப்பட்ட நாளில் நடந்த சில விடயங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

நடந்த உண்மை தெரியாமல், மனைவியை இழந்து கண்ணீர் விடும் தன் சகோதரியின் கணவனுக்கு ஆறுதல் சொல்ல அவர் அருகே Minal உட்கார, உடனே அவரது தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டுக் கதறினாராம் மித்தேஷ்.

அத்துடன், ஜெசிகாவின் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க மித்தேஷ் நின்றதை நினைவுகூரும் Minal, அவனால் எப்படி என் தங்கையைக் கொன்ற அதே கைகளால், என் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொள்ள முடிந்தது என குமுறுகிறார்.

ஓரினச்சேர்க்கை காதலனுடன் அவுஸ்திரேலியா சென்று வாழ திட்டமிட்ட மித்தேஷுக்கு குறைந்தது 30 ஆண்டுகள் சிறையில் செலவிடும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
போதையில் சென்ற சாரதியால் முல்லைத்தீவு மாணவர்களுக்கு நேர்ந்த கதி!