பிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..?

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும்  அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும் இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் திரில்லராக புதிய படம் உருவாகி , சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை இணைந்து தயாரிக்கின்றது.

வெளிநாடுகளில்   கடந்த 10 வருடங்களாக படதொகுப்பாளராகவும், இந்தியாவில் செலிபிரிட்டி போட்டோகிராபராக  வலம் வந்துகொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராகவும், மாயா,நெடுஞ்சாலை,எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு

தமிழில்  பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய  இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

முதல் முறையாக  ஒரு காப் ஸ்டோரி script பன்றதுல ஆரி அர்ஜுனன் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி  உள்ளிட்ட நகரங்களில்  படப்பிடிப்பு  நடைபெற உள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்தின் இசையமைப்பாளராகவும், பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும், கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும், பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும்

மற்றும்  படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன் மற்றும்  பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளராகவுள்ள விசுவநாதன் இத்திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும்,  25 ஆண்டு காலமாக சிறந்த சினிமா  பிஆர்ஓவாக வலம் வரும் நிகில் முருகன் இப்படத்திற்கு பி.ஆர்.ஓ_வாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
பிரபல நடிகருக்கு கோயில் கட்டிய கிராம மக்கள்…. காரணம் என்ன..!