தமிழ் சினிமாவில் இளம் கதாநாயர்களில் வெற்றிகரமாகவும் பிஸியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஹரிஸ்கல்யாண்.தற்பொழுது ஹரிஸ்கல்யாணின் அடுத்த படத்திற்கான தலைப்பும் (Tittle) முதல்பார்வையும் (Firstlook) வெளிவந்துள்ளது.
இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா என மூன்று பேரும் மீண்டும் இணையும் படத்திற்கு ‘ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனென்றால், ‘தளபதி’ படத்தின் ரஜினி கெட்டப் போலவே இதன் பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
Presenting the FL of my next titled #STAR on our superstar’s bday, with all ur love & god’s blessings !@elann_t @thisisysr @Screensceneoffl @sidd_rao @nixyyyyyy @Ezhil_DOP @editor_prasanna @devarajulu29 @sujith_karan @kunaldaswani @venkystudios @onlynikil @CtcMediaboy @Meevinn pic.twitter.com/CE9OJMDxAO
— Harish Kalyan (@iamharishkalyan) December 12, 2020