ஜோ பைடனின் புதிய திட்டம்! : அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் அமெரிக்க டொலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.

அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சகட்டத்தில் உள்ளது.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கையாளுவேன் என்று கடந்த தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டொலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ. 400 லட்சத்து கோடியாகும்.

இந்த திட்டத்துக்கு அமெரிக்க  பாராளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால்,  இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டொலர் நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்.

மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டொலரில் இருந்து 400 டொலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மட்டக்களப்பில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்று: அதிகரிக்கும் மரண எண்ணிக்கை