இணையத்தில் கிடைக்கும் தம்மிக்கவின் கொரோனா பாணி: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக பரபரப்பை ஏற்படுத்திய தம்மிக்க பண்டார தனது மருந்தை இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

e-bay ஊடாக விற்பனை செய்ய குறித்த பாணி மருந்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் ஒரு போத்தலின் விலை 250 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை மதிப்பில் 48,500 ரூபா வெளிநாடுகளில் விற்பனை செய்ய விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்து விநியோகத்திற்கான தபால் செலவாக 10 டொலரும் மேலதிக அறிவிடப்படுமென விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது பாணி மருந்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பருகுவது, சபாநாயகரிடம் மருந்தை வழங்குவது போன்ற படங்களும் விளம்பரத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்பட்டவர்கள் மட்டுமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் : சுகாதார வைத்திய அதிகாரி!