யாழ்ப்பாணத்தில் இன்று அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

நேற்றைய தினம் மருதனார்மடத்தில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் அவரின் இரண்டு உறவினர்கள் உட்பட ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின்  பணிப்பாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 31 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும் நேற்று தொற்றுதி செய்யப்பட்டவரின் 7 உறவினர்கள் தொற்றுக்குள்ளதானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் பாதுகாப்பற்ற மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி!