தற்போது வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாத பயனர்கள் மாசி 8 ஆம் தேதிக்கு பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ் அப் கூறி இருந்தது.வாட்ஸ் அப்பின் இந்த தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் இணைய சுதந்திரத்தைப் பறிப்பதாக வாட்ஸ் அப் பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் தங்களின் தனியுரிமையினைப் பாதிப்பதாக நினைத்து வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.
அந்தவகையில் வாட்ஸ் ஆப் போன்றே அம்சத்தினைக் கொண்டுள்ள சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் பயனர்கள் மத்தியில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இந்தியாவில் உள்ள தமிழகத்தினை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் அரட்டை செயலியினை (Arattai App) உருவாக்கி உள்ளது.
இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது வெகு விரைவாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது. அதாவது இந்த அரட்டை செயலியானது என்க்ரிப்ஷன் வசதியின் இறுதிக் கட்ட பணியில் இருக்கின்றது.
அதாவது ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயனர்களின் தகவல்கள் பயனர்களின் அனுமதி இன்றி வெளியே பகிரப்படாது. பயனரின் சில ஐப்படை விவரங்கள் அரசு விதிகளின்படி பகிரப்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது.