மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் தனியார் நிதி நிறுவனமொன்றில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கம்பஹா − மிரிஸ்வத்த பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
40 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
முகத்தை முழுவதமாக மறைக்க கூடிய முகக்கவசம் மற்றும் கறுப்பு ஆடை அணிந்து வந்த இருவர் நிதி நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்த 5 காவல்துறை குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.