நாட்டில் 235 பெண்களை வலைவீசி தேடும் காவல்துறையினர்; அதிர வைக்கும் காரணம்!

இணையதளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப் பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் யுவதிகளையே காவல்துறையினர் கைது செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசாரணைகள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் எம்.டப்ளியூ. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய மேல் மாகாண உளவுப் பிரிவினரால் முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றது.

அதன்படி இதுவரையில் குறித்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 பெண்கள் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண உளவுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ஜே.ஆர். லக்ஷமன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தில் ஏற்பட போகும் மாற்றம்! காரணம் இதான்…