தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்! பதறிய உரிமையாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு இனம் தெரியாத நபர்களினார் தீவைக்கப்பட்டுள்ளதாக மல்லாவி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த 13ஆம் திகதி மாலை சேவையில் ஈடுபட்ட தனது பேருந்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலை ஒரு மணியளவில் வீட்டு கதவை தட்டுவது போன்ற சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்து பார்த்த போது பஸ் தீப்பிடித்து எரிந்ததாகவும் கண்ணாடிகள் வெடித்து சிதறிய சத்தமே தமக்கு கேட்டதாகவும் யாரோ வேண்டுமென்றே தீ வைத்திருக்க வேண்டும் எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மல்லாவி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனளர். அத்துடன் நேற்றையதினம் தடயவியல் பொலிஸாரும் வருகைதந்து சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக க மல்லாவி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் யாசகம் செய்பவரின் சக்கர நாற்காலி திருட்டு!