அமெரிக்க வரலாற்றில் டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!

தகுதிநீக்கம் மட்டுமல்லாமல் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளையும் இழக்கும் நிலைக்கு டொனால்ட் ட்ரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை சந்தித்தவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான். அமெரிக்க வரலாற்றிலேயே கண்டன தீர்மானத்தை சந்தித்த மூன்றாவது அதிபரும் டொனால்ட் ட்ரம்ப் ஆவார். இந்த முறை ட்ரம்ப் சில சீரியஸான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற கலவரங்களுக்கு ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. செனட்டில் அவை இயங்கிக் கொண்டிருக்கும்போதே ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு வன்முறை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீது குற்றம்நிறைவேற்றப்பட்டால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் முடிய இன்னும் சில தினங்களே இருப்பதால் அந்த தேவை இல்லை. எனினும், இனி ட்ரம்ப் அதிபர் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் அவரை தகுதிநீக்கம் செய்ய தனி வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு, செனட்டில் பெரும்பான்மை கிடைத்துவிட்டாலே போதும், ட்ரம்பை தகுதிநீக்கம் செய்துவிடலாம். முதலில் ட்ரம்ப் மீதான குற்றங்களை செனட் நிரூபித்துவிட்டால், பின்னர் அவரை தகுதிநீக்கம் செய்துவிடலாம். இதன் விளைவாக, அதிபர் பதவி மட்டுமல்லாமல் எந்தவொரு பெடரல் பதவியையும் ட்ரம்ப் வகிக்க முடியாது.

இதுபோக, முன்னாள் அதிபர்கள் சட்டம் 1958-இன் கீழ் கிடைக்கும் சலுகைகளை டொனால்ட் ட்ரம்ப் அனுபவிக்க முடியாது. அதாவது, ட்ரம்புக்கு கிடைக்க வேண்டிய வாழ்நாள் முழுவதுமான ஓய்வூதியம், வருடாந்த பயண பட்ஜெட், அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கான நிதியுதவி ஆகியவை அவருக்கு கிடைக்காமல் போகும்.

ட்ரம்புக்கு தொடர்ந்து இரகசிய சேவை பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் அமெரிக்க காங்கிரஸ் சட்டத்திருத்தம் மேற்கொண்டால் அந்த பாதுகாப்பும் அவருக்கும் கிடைக்காமல் போகும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மீண்டும் விமான நிலையம் திறப்பு! : முதலாவது விமானம் நாட்டை வந்தடைந்தது…