‘எதார்த்தமாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு’… ‘கடைசியா அப்படியே நடந்து போச்சே’… மனதை உறைய வைத்த சம்பவம்

அடுத்த நொடி ஆச்சரியங்கள் தான் மனித வாழ்க்கை என்பார்கள்.  ஆனால் எதார்த்தமாகப் போடப்பட்ட பதிவு தற்போது ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் போயிங் 737-500 ரக (எஸ்.ஜே.182) விமானம் ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா  விமான நிலையத்திலிருந்து நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.36 மணிக்குப் புறப்பட்டது.

உள்நாட்டு விமானச் சேவையை வழங்கிவரும் அந்த நிறுவனத்தின் விமானம், மேற்கு காளிமந்தனின் மாகாணத் தலைநகரான போன்டியனாக் (Pontianak) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட நான்கு நிமிடங்களில், 2.40 மணியளவில் விமானம் நடுவானில் திடீரென மாயமாகியது. ஸ்ரீவிஜயா (SJ182) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாருடனான தொடர்பை இழந்து, விமானத்துக்கும் தரைக் கட்டுப்பாடு நிலையத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அந்த விமானத்தில், 7 சிறுவர்கள், மூன்று குழந்தைகள், 12 விமானப் பணியாளர்கள் உட்பட 62 பயணிகள் பயணித்திருக்கிறார்கள்.

இதனிடையே மயமான விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தை நேரில் பார்த்த மீனவர் ஒருவர், ”விமானம் மின்னல் போல் கடலில் விழுந்து தண்ணீரில் வெடித்தது” என அந்த கோரக் காட்சியை விவரித்துள்ளார்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த ”Ratih Windania” எனப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”Bye, Bye Family” நாங்கள் இப்போது வீட்டிற்குச் செல்கிறோம் என்ற கேப்சனோடு பதிவிட்டுள்ளார். அதில் அவரது இரண்டு குழந்தைகளும் அழகாகச் சிரிப்பது பதிவாகியுள்ளது.

அந்த புகைப்படம் காண்போரின் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய Ratih Windaniaவின் சகோதரர், அவர் எதார்த்தமாக Bye, Bye Family என்று போட்ட பதிவை நினைத்து மொத்த குடும்பமும் கலக்கத்தில் உள்ளது.

எதிரிக்குக் கூட இப்படி ஒரு நிகழ்வு வரக்கூடாது எனப் பேசிய அவர், Ratih விடுமுறையைக் கொண்டாடத் தனது வீட்டிற்கு வந்ததாகவும், 3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் போன்டியனாக் திரும்பும் போது இந்த கோரம் நடந்துள்ளதாகவும் Ratihயின் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

#FLIGHT

ஆனால் ஏதோ ஒரு மூலையில் சிறிய நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ள அவர், எங்களுக்காக ஜெபியுங்கள் எனக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்