கொவிட்-19 தொற்றினால் பிறந்து இருபது நாட்களேயான சிசு மரணம்

பிறந்து 20 நாட்களேயான சிசு COVID-19 தொற்றினால்  சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்தள்ளது.

கொழும்பு -15 முகத்துவாரம் பகுதியை சேர்ந்த சிசு ஒன்றே கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.

கொரானா தொற்றுக்குள்ளான குறித்த சிசு இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிசுவின் தாய்க்கும் தந்தைக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை என சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய தெரிவித்தார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை