இலங்கையிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு உறுதிபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

மரபணு மாறிய VUI-202012/0 புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை விட 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் 1412 வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்படவர்களுக்கான போராட்டம்