யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து திரிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தரியவருகையில்,குடாநாட்டில் இரு நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது.
யாழ் செம்மணி மயானத்தில் நேற்றையதினம் இருவர் உயிரிழந்த நிலையில் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் முற்றும் எரியாத நிலையில் இருந்த சடலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு நாய்களால் கொண்டுவரப்பட்டு வீதியில் போட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.