வவுனியாவில் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்

வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி, தாண்டிக்குளம் சந்தி, மாமடுவ சந்தி, பூந்தோட்டம் சந்தி, கண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பிரிவினர் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்துவதுடன்,

அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் செல்வற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் அரச உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையினை பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும் எனவும்,

 

வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து வன்னி இராணுவ முகாம் வரையும், வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுவதுடன் மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது தொடர்பிலும்,

தனிமைப்படுப்படும் பகுதிகளுடாக நகருக்குள் பிரவேசிக்கும் தனியார், இ.போ.ச பேரூந்துகள் நகரின் எப்பகுதியிலும் தரித்து நிற்பதற்கு தடை விதிக்கப்படுவதுடன் வைத்தியசாலைக்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மாத்திரம் பேரூந்துகளை நிறுத்த முடியும் எனவும்,

மூடக்கப்படும் பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையினையும் அமுல்படுத்தவுள்ளோம் போன்ற பல தீர்மானங்கள் இது வரை மேற்கொள்ளப்பட்டன.

இவ் விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர், சமயத்தலைவர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் சடுதியாக அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள் : அபாய கட்டத்தில் நகரம்!