மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் விசாலமான காற்றாலை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் இவ் மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலின் மூலம் 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இவ் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் மூலம் ஒரு மின்சார அலகுக்கு எட்டு முதல் ஒன்பது ரூபா வரையிலான குறைந்தளவு விலையில் உற்பத்தி செய்ய முடியும்.