கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 70 பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஏற்கனவே கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஐவருடன் தொடர்புகளைப் பேணிய 113 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 113 பேரில் 70 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாகவும், அவர்கள் அடுத்த வாரமே பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.