வவுனியாவில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின் போது அங்கு வந்த மனைவியின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு கட்டையினாலும் சரமாரியாகத் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஓமந்தை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினால் குற்றவாளி கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக் காயத்திற்குள்ளானவர் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.