இலங்கையின் தேசிய பாடசாலைகளை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 350 தேசிய பாடசாலைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் மூன்று கட்டங்களாக ஆயிரம் தேசிய பாடசாலைகளை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.