“உலகத்துலயே அதிர்ஷ்டம் கெட்ட 2 கொள்ளையர்கள்!”.. ‘ஹோம் அலோன்’ பட வில்லன்களுடன் ஒப்பிட்டு காவலர் போட்ட வைரல் பதிவு.. மாட்டிக்கொண்ட லட்சணம் வேற லெவல்!

பிரிட்டனின் Staffordshire என்கிற இடத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு நேற்று மாலை 42 மற்றும் 49 வயதுள்ள இரண்டு கொள்ளையர்கள் திட்டமிட்டு திருட வந்துள்ளனர். ஆனால் கொள்ளையடித்து விட்டு வெளியே வந்து இரண்டு கொள்ளையர்களும் வெளியே இருந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். காரணம் வெளியில் காவல்துறையினர் காருடன் காத்திருந்தது தான்.

திரைப்படத்தில் கூட இப்படி நடக்காது என்று கூறும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது என்றால்… திருடச்சென்ற திருடர்களில் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் தொலைபேசியை வைத்து இருந்துள்ளார். அப்படி தொலைபேசி வைத்து இருந்த அந்த கொள்ளையன் ஒருவன் உட்காரும்போது தற்செயலாக அந்த தொலைபேசி மூலமாக 999 என்கிற, காவல்துறையினரை அழைக்கக்கூடிய அவசர உதவி எண்ணுக்கு தவறுதலாக அழைப்பு சென்றுள்ளது.

இந்த அழைப்பை அட்டன் செய்த காவல்துறையினர் இந்த கொள்ளையர்கள் இந்த வீட்டுக்குள் வந்தது முதல் பேசியது வரை திட்டமிட்ட அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

மொத்த வீட்டையும் சுருட்டிக்கொண்டு கொள்ளையர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கொள்ளையர்களை லபக்கென்று கவ்விக் கொண்டு செல்வதற்காக அந்த வீட்டு வாசலில் மளமளவென காவல்துறையினர் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட தலைமை காவல்துறை ஆய்வாளர் உலகிலேயே இந்த அதிர்ஷ்டம் கெட்ட 2 கொள்ளையர்களை நாங்கள் பிடித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்று வேடிக்கையாக குறிப்பிட்டதுடன், இவர்களை பிரபல ஆங்கில திரைப்படமான ‘ஹோம் அலோன்’ பட வில்லன்களுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
டிரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதிரடி முடக்கம்; காரணம் என்ன?