‘செயற்கை சூரியன்’ என்று அழைக்கப்படும் அதிநவீன அணுஉலையை வெற்றிகரமாக இயக்கிய நாடு

சீன தேசிய அணுசக்தி கழகம் (CNNC) அணுஉலையை வெற்றிகரமாக சோதனைகளை செய்து முடித்ததாக அறிவித்துள்ளது.

இவ் அணு உலைகளில் ‘அணுக்கரு பிளவு’ என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த முறையில் யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை சிறு சிறு அணுக்களாகப் பிரிக்கும்போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். இந்த ஆற்றலைப் பயன்படுத்தித்தான் அணு உலைகளில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

இந்த செயல்முறையின்போது அதிக அளவிலான கதிர் வீச்சும் வெளிவருவதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்க ‘அணுக்கரு இணைவு’ என்னும் முறையில் ஆற்றல் உண்டாக்க முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சூரியனிலும் இந்த முறையில் தான் ஆற்றல் உண்டாக்கப்படுகிறது. அதனால்தான் இதை ‘செயற்கை சூரியன்’ என அழைக்கிறார்கள். இதற்கு ஹைட்ரஜன் மற்றும் தூத்தோரியம் வாயுக்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக் கதிர்வீச்சு எதுவும் வெளிப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத சுத்தமான ஆற்றலை இதிலிருந்து கிடைக்க பெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முறையில் வெளிப்படும் வெப்பம் 15 கோடி டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சூரியனின் மைய வெப்பத்தை விட 10 மடங்கு அதிகம் என்பது வியக்கவைக்கும் விடயம் ஆகும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
விஜய் – நெல்சன் இணையும் தளபதி-65.. அட இவங்கதான் ஹீரோயினா..?