அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த கார்த்திகை மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபராக அவருக்கு வரும் 20-ம் தேதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.
இதனையடுத்து, அமெரிக்காவின் 46-வது அதிபராக அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.
அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், ஏற்பட்ட கலவரம், மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்பட்டது.
மேலும், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ட்ரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்கின்ற பயனாளர்கள் 88 மில்லியன் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட சூழலில், அவர் தனது அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசு கணக்கில் இருந்து டுவிட்டர் பதிவுகளை வெளியிட தொடங்கினார்.
அதில், சுதந்திர பேச்சுக்கு தடை விதிக்கும் வேலையில் டுவிட்டர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறது. இதனை நான் நீண்டகாலம் ஆக கூறி வருகிறேன்.
ஜனநாயக கட்சியினருடன் டுவிட்டர் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் என்னை அமைதிப்படுத்த முயல்கின்றனர்.
டுவிட்டரில் என்னை பின்தொடரும் 7.5 கோடி பேரையும் அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.
எனினும், ஒரு சில நிமிடங்களில் டிரம்பின் அதிகாரப்பூர்வ அரசு கணக்கான பாட்டஸ் (POTUS) கணக்கும் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டீம் டிரம்ப் என்ற பெயரில் டிரம்பின் குழுவினர் மற்றொரு டுவிட்டை வெளியிட்டனர்.
எங்களை அமைதிப்படுத்த முடியாது. சுதந்திர பேச்சுக்கு டுவிட்டர் ஏற்றதில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கணக்கும் முடக்கப்பட்டு உள்ளன.
In a now-deleted tweet, outgoing US President Donald Trump said he was looking at "possibilities of building out our own platform in near future".
— ANI (@ANI) January 9, 2021