யாழ். பல்கலைக்கழக பதற்றத்தின் பின்னணியில் இவர்களா? வெளியானது திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றைய தினம் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், அதனை விஸ்வநாதன் காண்டீபன் இவர் தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டனர்.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்றைய தினம் இரவு எட்டு மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணமாகும்.

தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி!