அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர்!

 

டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, மஸ்க்கை அமேசான்.காம் இன்க் நிறுவனத்தை விடவும் முந்திக்கொண்டு பணக்காரராக உயர்த்தியது. இந்த தகவல்கள் உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த பொறியாளரான எலோன் மஸ்கின் நிகர மதிப்பு நியூயார்க்கில் காலை 10:15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அக்டோபர் 2017 முதல் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துவரும் பெசோஸை விட 1.5 பில்லியன் டாலர் அதிகம்.

டெஸ்லாவின் பங்கு விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிவேக வளர்ச்சியில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743% உயர்ந்தது.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு