வவுனியா செட்டிக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவர் கைது!

வவுனியா செட்டிக்குளம் நகரில் இன்று (08.01.2020) மதியம் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவினை தம்வசம் ஒருவர் வைத்திருப்பதாக செட்டிக்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 700 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

இதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன் குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றியு ள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதுடைய நபர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும்,

குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் சந்தேக நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை செட்டிக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கொவிட்-19 தொற்றினால் பிறந்து இருபது நாட்களேயான சிசு மரணம்