யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மிக விரைவில் திறக்கப்படும் என கூட்டமைப்பினரிடம் , இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்தேசிய கூறியுள்ளார்.

கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீளத் திறப்பது மற்றும் வட,கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்போது அது தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்,

எதிர்வரும் 23 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமும் செயற்பபாட்டுக்கு வரும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இந்தியாவின் உதவி அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
“ரொம்ப நாளா வீட்டிற்கு அடியில் இருந்த ‘சுரங்கம்’.. இது எப்படி எனக்கு தெரியாம போச்சு??…” ஷாக்கான ‘கணவர்’… இறுதியில் மனைவியால் காத்திருந்த ‘பேரதிர்ச்சி’!