அகில தனஞ்சய பந்து வீச முடியுமா? முடியாதா? ஐ.சி.சியின் அதிரடி அறிவிப்பு!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீசும் பாணி ஐ.சி.சியின் சட்டவிதிகளுக்குப்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அகில தனஞ்சய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொண்டு பந்துவீச முடியுமென சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப்பாணியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

பின்னர் முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி தடைவிதித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ஆத்தி… எப்டி எல்லாம் யோசிச்சு காதலை வெளிப்படுத்துறாங்க !… காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன’காதலி’! வைரல் காணொளி!