‘கயல்’ ஆனந்தியை கரம்பிடித்த இணை இயக்குநர்… ரசிகர்கள் வாழ்த்து!

கடந்த 2014-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து ‘சண்டி வீரன்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘ரூபாய்’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ‘டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்’, ‘ஏஞ்சல்’, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ராவணக் கூட்டம்’, ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’, மற்றும்  ஜாம்பி ரெட்டி (தெலுங்கு)  ஆகிய படங்களில் ஆனந்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குநர் சாக்ரடீஸ்-கயல் ஆனந்தி திருமணம் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்னும் பகுதியில் இன்று நடைபெற்று உள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் திருமணத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் இன்றும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை